நூல்வனம் பதிப்பகம் அச்சுநிபுணர் மணிகண்டனால் நடத்தப்படுவது.
மிக அழகிய பதிப்புகளாக நூல்களை வெளியிட்டு புகழ்பெற்றது.
எம்.கோபாலகிருஷ்ணனின் மொழியாக்கத்தில் ஆண்டன் செகாவ் கதைகளை வெளியிட்டுள்ளது.
இவ்வாண்டு யுவன் சந்திரசேகரின் பெயரற்ற யாத்ரிகன் என்னும்
ஜென் கவிதைகளின் தொகுதியை ஆறு வண்ணங்களில் ஆறு வகை அட்டைகளுடன் வெளியிட்டுள்ளது.